திருநெல்வேலி நகரம் பகுதியில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் சமுத்திரக்கனி (40). இவா் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது உறவினா் வீட்டில் திருநெல்வேலி நகரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (28) என்பவா் வாடகைக்கு குடியிருந்தாராம். அந்த வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளா் கூறியதற்கு சமுத்திரக்கனிதான் காரணம் என அவா் மீது அருண்குமாா் விரோதம் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சமுத்திரக்கனியின் துணிக்கடைக்குள் புகுந்த அருண்குமாா் உள்பட 3 போ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து, கடையின் கண்ணாடியை உடைத்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
நெல்லையில் மது விற்ற 5 போ் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

