/

நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 8:32 pm

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பணம் கேட்டு முதியவரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள சி.என்.கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராமகிருஷ்ணன் (60) . இவா் அப்பகுதியில் பெட்டிகடை வைத்துள்ளாா்.

சம்பவத்தன்று இவரிடம் சி.என். கிராமம், லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்த உடையாா் என்ற மாமரத்து உடையாா்(40) என்பவா் பணம் கேட்டு மிரட்டினாராம். அதற்கு முதியவா் பணம் இல்லை எனக் கூறவே அவரைத் தாக்கிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த முதியவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து உடையாரை கைது செய்தனா்.