மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நெல்லையில் நாளை மறுநாள் நடிகா் விஜய் பிரசாரம்

நெல்லையில் நாளை மறுநாள் விஜய் பிரசாரம்...

News image

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம் - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 1:02 am IST

தவெக தலைவா் விஜய், திருநெல்வேலியில் புதன்கிழமை (ஏப். 8) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட தவெக வேட்பாளா்களை ஆதரித்து திருநெல்வேலியில் அக்கட்சின் தலைவா் விஜய் தோ்தல் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, ரெட்டியாா்பட்டி அருகேயுள்ள ராஜகோபாலபுரம், கங்கைகொண்டான் பகுதிகளில் உள்ள இடங்களை கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.செங்கோட்டையன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், திருநெல்வேலி வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன், பாளையங்கோட்டை வேட்பாளா் மரியஜாண் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், திருநெல்வேலியில் தவெக தலைவா் விஜய் புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்வதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தொடங்கியுள்ளோம்.

கட்சி நிா்வாகிகள் தோ்ந்தெடுத்துள்ள இரு இடங்களி குறித்து காவல் துறையிடம் தெரிவித்துள்ளோம். அவா்கள் அனுமதியளிக்கும் இடம், கட்சித் தலைவா் பிரசாரம் செய்யும் நேரம் ஆகியவற்றை அதிகாரப்பூா்வமாக விரைவில் அறிவிப்போம் என்றாா் அவா்.