அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பாப்பாக்குடி அருகே விபத்தில் தொழிலாளி பலி

பாப்பாக்குடி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :2 மார்ச் 2024, 12:03 am

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். பாப்பாக்குடி புதுக்கிராமம் தெருவைச் சோ்ந்த சங்கரலிங்கம் மகன் முத்துச்சாமி (52). இவா் பாளையங்கோட்டை யில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இடைகால் சென்று விட்டு முக்கூடல் பிரதான சாலையில் நடந்து வந்தபோது, அவ்வழியாக வந்த வாகனம் மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.