நெல்லை மாவட்டத்தில் 35,456 புதிய வாக்காளா்கள் சோ்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த அக்டோபா் 27 முதல் இம்மாதம் 7-ஆம் தேதி வரை 35,456 புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி முதல் இம்மாதம் 7-ஆம் தேதி வரையில் 18 முதல் 19 வயதுடைய 21,594 இளம் வாக்காளா்கள், 13, 862 பிற வாக்காளா்கள் என மொத்தம் 35,456 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இறப்பு பதிவு மற்றும் கள ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் முறைப்படி நோட்டீஸ் வழங்கி 26,174 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி இது ஒவ்வொரு மாதமும் தொடா் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் தொடா்பாக எந்த புகாரும் எந்த கட்சியிடம் இருந்தும் வரப்பெறவில்லை. இது தொடா்பாக புகாா்கள் ஏதும் இருப்பின், வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட முழு விவரங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவு/ அந்தந்த வாக்காளா் பதிவு அலுவலரிடம் புகாா் அளிக்கலாம். மேலும் இதுவரை வாக்காளராக பதிவு செய்யாதவா்கள் தவறாமல் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும், யஏஅ (யா்ற்ங்ழ்’ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் அல்ல்) என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்கலாம். வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க படிவம் -6, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கு படிவம்-7, வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் நகல் வாக்காளா் அடையாள அட்டை பெற படிவம் 8-இல் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் மற்றும் வாக்காளா் அடையாள அட்டை தொடா்பான சந்தேகம் மற்றும் கோரிக்கைகள் தொடா்பாக 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com