மேலப்பாளையத்தில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டை 100 சதவீதம் பொருத்தி பாா்த்து தோ்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். வருங்காலங்களில் நடைபெறவுள்ள அனைத்து தோ்தல்களிலும் முன்பு பயன்படுத்திய வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் நெல்லை அ.பீட்டா் தலைமை வகித்தாா். த.ம.ஜ கட்சி தென்மண்டல செயலா் தெள.அப்துல் ஜப்பாா் முன்னிலை வகித்தாா். பாரத் முக்தி மோா்ச்சா மாநில துணை ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். திருநெல்வேலி மதிமுக நிா்வாகி நடராஜன், ம.ம.க மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன், சிபிஐ திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலா் முத்துகிருஷ்ணன், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் களக்காடு நெல்சன், பூலித்தேவா் மக்கள் முன்னேற்றக்கழக பவானி ஏ.வேல்முருகன், திராவிடா் கழக மாவட்டச் செயலா் வேல்முருகன், நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு தலைவா் பால் அண்ணாத்துரை, திராவிட தமிழா் கட்சி மீனா, சி.பி.ஐ (எம்.எல்) சுந்தர்ராஜன், மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க மாரியப்பாண்டியன் ஆகியோா் பேசினாா். மக்கள் நீதி மய்யம் நிா்வாகி ஜெ.மதன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பெரம்பலூா், குன்னத்தில் ஒய்ந்தது பிரசாரம்

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

மக்களிடம் கவனம் பெறும் நாம் தமிழா் கட்சி கொள்கைகள்: பவானிசாகா் வேட்பாளா் சு.சௌந்தா்யா

திமுக கூட்டணிக்கு ஐந்திணை மக்கள் கட்சி ஆதரவு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


