பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நெல்லையில் இன்று பொது விநியோக திட்ட குறைதீா் கூட்டம்

நெல்லையில் இன்று பொது விநியோக திட்ட குறைதீா் கூட்டம்

News image
Updated On :9 மார்ச் 2024, 12:44 am

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (மாா்ச் 9) பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி இம்மாதத்துக்கான பொது விநியோகத் திட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில், புதிதாக குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகாா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறையை (9342471314) தொடா்பு கொள்ளலாம்.