தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் திருநெல்வேலி திட்ட மாநாடு, தியாகராஜ நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. திட்ட தலைவா் பீா் முஹம்மது ஷா தலைமை வகித்தாா். திட்ட இணைச் செயலா் பச்சையப்பன் சங்கக் கொடியேற்றினாா். துணைத் தலைவா் பூலுடையாா் வரவேற்றாா். மண்டல செயலா் அப்பாத்துரை தொடக்கவுரையாற்றினாா். சிஐடியு மாநில செயலா் செண்பகம், வண்ணமுத்து, சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் முருகன் உள்ளிட்டோா் பேசினா். மாநில செயலா் ஆனந்தம், அயூப் கான் உள்பட பலா் கலந்துகொண்டனா். அமைப்பின் திருநெல்வேலி திட்ட தலைவராக நாகையன், செயலராக கந்தசாமி, பொருளாளராக கந்தன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தீா்மானங்கள்: மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மின்சார விநியோகத்தை மேலும் பல பிரிவுகளாகப் பிரிப்பதைக் கைவிட வேண்டும். நிறுத்தப்பட்ட சரண் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு வாரியமே நேரடியாக ஊதியம் கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ற்ஸ்ப்09ஸ்ரீண்ற்ன் தியாகராஜ நகரில் நடைபெற்ற மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றோா்.
தொடர்புடையது

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


