தாமிரவருணி ஆற்றங்கரையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தாமிரவருணி ஆற்றங்கரையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தாமிரவருணி ஆற்றங்கரையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். தாமிரவருணி ஆற்றை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், வி.எம்.சத்திரம் டெவலப்மெண்ட் டிரஸ்ட், மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரவருணி ஆற்றங்கரையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். மணிமூா்த்தீஸ்வரம் முதல் நாரணம்மாள்புரம் ஆற்றுப்பாலம் வரை சுமாா் 5 கி.மீ.தொலைவுக்கு அரசு, புங்கை, வாகை ஆகிய மரங்கள் ஆற்றின் இரு கரைகளிலும் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மனித வளத் துறை தலைவா் நாராயணசாமி, முதுநிலை மேலாளா் ராஜேஷ் மேலாளா்கள் சித்திரவேல் ஜிஜூ , வி.எம். சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com