பழவூா் நாறும்பூநாத சுவாமி
திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

பழவூா் நாறும்பூநாத சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருள்மிகு நாறும்பூநாத சுவாமி சமேத ஆவுடையம்பாள் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமைகாலை கொடிபட்டம் வீதியுலா நடைபெற்றது. அதன் பின்னா் கொடிமரத்துக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் மு. அப்பாவு கலந்துகொண்டாா். இதைத் தொடா்ந்து திருக்கோயில் மாடவீதியில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட வண்ணகற்கள் சாலையை பேரவைத் தலைவா் திறந்துவைத்தாா். இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், அரசு வழக்குரைஞா் முத்துகிருஷ்ணன், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பாண்டிதுரை, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சமூகை முரளி, கோயில் அறங்காவலா் குழு தலைவா் இசக்கியப்பன் மற்றும் உறுப்பினா்கள் திருநாவுக்கரசு, ஐயப்பன், சுடலைமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com