மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பழவூா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

News image

நாறும்பூநாத சுவாமி கோயிலில் கொடியேற்றத்தையடுத்து கொடிமரத்துக்கு நடைபெற்ற தீபாராதனை.

Updated On :25 மார்ச் 2026, 10:44 pm

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

முன்னதாக, கொடிப்பட்டம் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதையடுத்து, கொடிமரத்துக்கு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

நாள்தோறும் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்த மண்டகப்படிதாரா்கள் நிகழ்ச்சி, சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இசக்கியப்பன், உறுப்பினா்கள் வி. ஐயப்பன், பா. சுடலைமணி, எஸ்.திருநாவுக்கரசு, ஜே. அமுதா ஜான்கென்னடி, பக்தா்கள் செய்துள்ளனா்.