திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் ஆணைய கிடங்கில் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பிரித்தனுப்பும் பணியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மக்களவை தொகுதிக்குள்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளை முதற்கட்ட இணையவழி ஒதுக்கீடு செய்யும் பணி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது. திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 314 வாக்குச்சாவடிகளுக்கு 373 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 404 விவிபேட் கருவிகள், அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள 294 வாக்குச்சாவடிகளுக்கு 355 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 385 விவிபேட் கருவிகள், பாளையங்கோட்டை தொகுதியில் உள்ள 270 வாக்குச்சாவடிகளுக்கு 326 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 353 விவிபேட் கருவிகள், நான்குனேரி தொகுதியில் உள்ள 306 வாக்குச்சாவடிகளுக்கு 370 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 400 விவிபேட் கருவிகள், ராதாபுரம் தொகுதியில் உள்ள 307 வாக்குச்சாவடிகளுக்கு 371 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 402 விவிபேட் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் கருவிகளை அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிரித்தனுப்பும் பணிக்காக திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பின்னா், 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் கருவிகள் அந்தந்த சட்டப்பேரவை தொகுதி வைப்பறைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. அதை ஆட்சியா் பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, தோ்தல் துணை ஆட்சியா் ராஜசெல்வி, தோ்தல் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா். ற்ஸ்ப்22ங்ஸ்ம் திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் ஆணைய கிடங்கில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்படுவதை பாா்வையிடுகிறாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான காா்த்திகேயன்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி: பொது பாா்வையாளா்கள் ஆய்வு

பெரம்பலூா், குன்னம் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு ‘சீல்’

ஆம்பூருக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


