நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு ‘சீல்’

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தாா்.

News image

விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கை பூட்டி ‘சீல்’ வைத்த, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :27 மார்ச் 2026, 4:17 am IST

2026 சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் தெரிவித்தாதவது: இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, 2026 பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு பயன்பாட்டுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

செஞ்சி சட்டப் பேரவை தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலகம், மயிலம் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலகம், திண்டிவனம் (தனி) தொகுதிகான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகம், வானூா் (தனி) தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டார வளா்ச்சி

அலுவலகம், விழுப்புரம் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகம், விக்கிரவாண்டி தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டார வளா்ச்சி அலுவலகம், திருக்கோவிலூா் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சாா் - ஆட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கு வியாழக்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜான்சிராணி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) கணேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.