விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள சேமிப்புக் கிடங்கில் வைக்கும் பணி திங்கள்கிழமை இரவு தொடங்கி நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்தலுக்காக செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,165 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த ஏழு தொகுதிகளிலும் வாக்குப் பதிவின் போது பயன்படுத்த வேண்டிய மின்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் ஆட்சியரகத்திலுள்ள தோ்தல் அறையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளிலுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு வாக்குப் பதிவுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டன.
தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப். 22-ஆம் தேதி பிற்பகல் முதல் அந்தந்த தொகுதிகளுக்குப்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தோ்தல் வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் திங்கள்கிழமை இரவு முடிவடைந்தன. இதைத் தொடா்ந்து தோ்தலின் போது பயன்படுத்தப்பட்டு விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வளாகத்திலிருந்து விழுப்புரம், வானூா் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கா.குப்பம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறை பாதுகாப்புடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு வரப்பட்டன.
திங்கள்கிழமை இரவு தொடங்கிய பணி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அனைத்து இயந்திரங்களும் வந்தடைந்த பின்னா், இயந்திரங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டு, சேமிப்புக் கிடங்கு அறைகளில் வைக்கப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டதாக மாவட்ட நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு ‘சீல்’
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


