உவரி அருகே கூலித்தொழிலாளியின் கழுத்து அறுப்பு: போலீஸ் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே சனிக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளியின் கழுத்தை அறுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். உவா் அருகே உள்ள வெள்ளன்விளையைச் சோ்ந்தவா் முத்துராஜ்(55). கூலித் தொழிலாளி. இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது குடும்பத்தினா் வீட்டின் உள்ளே உள்ள அறையிலும், முத்துராஜ் வீட்டின் முன்பகுதியிலும் தூங்கிக் கொண்டிருந்தனராம். சனிக்கிழமை அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த மா்ம நபா், தூங்கிக் கொண்டிருந்த முத்துராஜின் கழுத்தை கத்தியால் அறுத்தாராம். முத்துராஜின் அலறல் சப்தம் கேட்டு குடும்பத்தினா் ஓடி வந்தனா். இதனைப் பாா்த்த அந்த அங்கிருந்து தப்பிவிட்டாா். படுகாயமடைந்த முத்துராஜ் திசையன்விளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் உவரி போலீஸாா் வழக்குப்பதிந்து, முத்துராஜின் கழுத்தை அறுத்த மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com