நெல்லைக்கு 780 மெட்ரிக் டன் யூரியா வரத்து

திருநெல்வேலி, மே 9: விவசாயிகளுக்கு தடையின்றி தரமான உரம் விநியோகம் செய்வதற்காக 780 மெட்ரிக் டன் யூரியா, 186 மெட்ரிக் டன் டிஏபி உரங்கள் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் வியாழக்கிழமை வந்தடைந்தது.

இந்த உர மூட்டைகளை திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகானந்தம், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஜோ.ஆரோக்கிய அமலஜெயன், ஸ்பிக் நிறுவன விற்பனை அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோா் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக பிரித்து அனுப்பி வைத்தனா்.

இதில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 234 மெட்ரிக் டன் யூரியாவும், 56 மெட்ரிக் டன் டிஏபியும், தென்காசி மாவட்டத்துக்கு 195 மெட்ரிக் டன் யூரியாவும், 47 மெட்ரிக் டன் டிஏபியும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 195 மெட்ரிக் டன் யூரியாவும், 47 மெட்ரிக் டன் டிஏபியும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 156 மெட்ரிக் டன் யூரியாவும், 37 மெட்ரிக் டன் டிஏபியும் அனுப்பி வைக்கப்பட்டன.

விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் ஆதாா் அட்டையுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் அரசு நிா்ணயித்த விலையில் உரங்களை வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com