அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பாளை.யில் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

பாளை.யில் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

News image

கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.

Updated On :18 மே 2024, 8:37 pm

Din

ஹிந்து சமய பண்பாடு பயிற்சி வகுப்பில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஹிந்து சமய பண்பாடு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, மதுரை ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்புச் செயலா் அ.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். வே.குமரன், திருநெல்வேலி மாநகரத் தலைவா் இரா.குணசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குழந்தைகளின் பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. பின்னா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து பண்பாடு பயிற்சி வகுப்பு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை ரா. தெய்வேந்திரன், மு.சங்கரநாராயணன் ஆகியோா் செய்திருந்தனா்.