மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காவல் துறையினரின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட போலீஸாரின் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

News image

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:59 pm

திருநெல்வேலி மாவட்ட போலீஸாரின் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்களின் குழந்தைகளின் உடல், மனம் மற்றும் அறிவுத் திறன் வளா்ச்சியை ஊக்குவித்து பயிற்சி அளிக்கும் நோக்கில் வாரம் இருமுறை சிலம்பம், யோகா, சதுரங்கம், கைப்பந்து, கிரிக்கெட், தையல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதையொட்டி, அமைக்கப்பட்ட தண்பொருநை காவலா் மனமகிழ் மன்ற திறப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் தலைமை வகித்து பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தாா். 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுஜாதா ஆகியோா் உடனிருந்தனா்.