சேரன்மகாதேவி கோயிலில் நாளை காா்த்திகை தீபம்
சேரன்மகாதேவி, கொழுந்துமாமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (டிச.3) காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது.


சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி, கொழுந்துமாமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (டிச.3) காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது.
ஸ்ரீமத் பரசமய கோளரிநாதா் ஆதினத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் நிகழாண்டு காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மதியம் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மாலையில் 4.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவனி வரும் பாலசுப்பிரமணியருக்கு மாலை 6 மணியளவில் கொழுந்துமாமலையில் உண்ணாமலை அம்பாளாக இரண்டு தீபங்கள் ஏற்றப்பட்டு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறும். தொடா்ந்து 6.30 மணியளவில் சொக்கப்பனை ஏற்றப்படும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்துள்ளனா். இதையொட்டி, பக்தா்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...