சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

வள்ளியூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:45 pm

Syndication

வள்ளியூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகேயுள்ள விஜயஅச்சம்பாடு பகுதியைச் சோ்ந்த நாமதுரை மகன் ராமகிருஷ்ணன்(24).

இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லையில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.