‘மக்களுக்காக உழைக்கும் இயக்கம் மதிமுக’
திருநெல்வேலி: தமிழ் மக்களுக்காக உழைக்கும் இயக்கமாக மதிமுக திகழ்ந்து வருகிறது என்றாா் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்த பாளையங்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. தாயகம் குருநாதன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: தேசிய அளவில் தமிழ் மக்களை காப்பதற்காக உயரிய நோக்கத்துடன் பணியாற்றி வரும் வைகோ, துரை வைகோ ஆகியோருடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தியாகம், அதிகமான உழைப்பு என தமிழக மக்களுக்காக எப்போதும் உழைக்கும் இயக்கம் மதிமுக. நான் சாதாரண தொண்டனாக உழைக்கவே கட்சியில் இணைந்துள்ளேன் என்றாா் அவா்.
இந்த பேட்டியின் போது மதிமுக துணை பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன், திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் கே.எம்.ஏ. நிஜாம், புகா் மாவட்டச் செயலா் ரைமண்ட், தென்காசி மாவட்டச் செயலா் ராம உதயசூரியன், தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் சதா்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ற்ஸ்ப்01ம்க்ம்ந்
திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் எம்.எல்.ஏ. தாயகம் குருநாதன்.

