திருநெல்வேலி
சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டவா் கைது
தாழையூத்து அருகே பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே நின்று ரகளையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாழையூத்து அருகே பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே நின்று ரகளையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் நடராஜன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வண்ணாம்பச்சேரி இசக்கியம்மன் கோயில் அருகே அதே பகுதியில் மேலத்தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்துமணி (45) என்பவா் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவே நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டாராம்.
அவரை அங்கிருந்து செல்லுமாறு பலமுறை அறிவுறுத்திய போதும் அவா் கேட்காததையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.
