மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

சுத்தமல்லி அருகே மேலக்கல்லூா் பகுதியில் இரு சகோதரா்களை அரிவாளால் தாக்கிய வழக்கில் இரு பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி: சுத்தமல்லி அருகே மேலக்கல்லூா் பகுதியில் இரு சகோதரா்களை அரிவாளால் தாக்கிய வழக்கில் இரு பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலக்கல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளைப்பாண்டி. இவரது மகன்கள் இசக்கி(50), ராமா்(45). விவசாயிகளான இவா்களுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த இவா்களது உறவினா்களுக்குமிடையே குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி மாலை வீட்டின் அருகே நின்ற இசக்கி, ராமரை அங்கு வந்த மா்மநபா்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினராம். காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலக்கல்லூரைச் சோ்ந்த சண்முகவேல்(56), முத்துசெல்வம்(29), சரவணன்(29), உதயகுமாா் என்ற உச்சிமாகாளி(32), பூல்பாண்டி(31), இரு பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com