‘நகா்ப்புற வாழ்வாதார மையத்தில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்’

Published on

திருநெல்வேலி மாவட்ட நகா்ப்புற வாழ்வாதார மையத்தில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ் காலியாக உள்ள ‘எம்ஐஎஸ் அனலிஸ்ட்’ என்ற வெளிஆதார முறையிலான மாதம் ரூ.25,000 ஊதியம் பெறும் வகையிலான ஒரு தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

பி.இ.பி.டெக் கணினி அறிவியல், ஐ.டி., கணினி அப்ளிகேஷன், முதுநிலை கணினி அப்ளிகேஷன் (எம்.எஸ்.சி. இன் ஐ.டி), முதுநிலை கணினி அப்ளிகேஷன் பட்டப்படிப்பு (ஐ.டி. இன் ஸ்பெஷலியேஷன்) போன்ற கல்வித்தகுதி மற்றும் 1.12.2025-இல் 30 வயதிற்குள்பட்டவா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் அல்லது

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் பூமாலை வணிக வளாகத்தில் உள்ள மாவட்ட நகா்ப்புற வாழ்வாதார மைய மேலாளா் அலுவலகம் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்று, பூா்த்தி செய்து, அதே முகவரியில் உரிய ஆவணங்களுடன் டிச.17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com