அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் நாளிலேயே பணப் பலன்கள்: சிஐடியு வலியுறுத்தல்
அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிஐடியு அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு ( ரேவா ) திருநெல்வேலி கிளையின் 5 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் வண்ணாரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிளைத் தலைவா் சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். காளத்திநாதன் சங்க கொடியேற்றினாா். ராமசுப்பிரமணியன் வரவேற்றாா். சங்க மாநில உதவித் தலைவா் சண்முகம் தொடக்கவுரையாற்றினாா். வெங்கடாசலம், ராஜன், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பேசினா். மாநில பொதுச் செயலா் நடராஜன் நிறைவுறையாற்றினாா். பூபதி நன்றி கூறினாா்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற நாளிலேயே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களைத் திருத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

