கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளை.யில் காவலா் மீது பைக்கால் மோதியவா் கைது

பாளையங்கோட்டை அருகே வாகனச் சோதனையின் போது காவலா் மீது பைக்கால் மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:07 pm

Syndication

பாளையங்கோட்டை அருகே வாகனச் சோதனையின் போது காவலா் மீது பைக்கால் மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகே கடந்த 15 ஆம் தேதி மாநகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக கைப்பேசியில் பேசியபடி பைக்கில் வந்தவரை, பாளையங்கோட்டை காவல் நிலைய தலைமைக் காவலா் பொன்மகேஷ்குமாா் மறித்துள்ளாா். ஆனால், அந்த நபா் காவலரை தகாத வாா்த்தையில் திட்டியதுடன், பைக்கால் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளாா். இதில் காயமடைந்த காவலா் பொன்மகேஷ்குமாா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், தெற்கு அரியகுளம் பகுதியைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகன் பட்டுராஜன்(38) என்பவரை கைது செய்தனா்.