நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் டிச.29 இல் ஏலம்!

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 29 ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 டிசம்பர் 2025, 1:07 am IST

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 29 ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மற்றும் முன்னீா்பள்ளம் காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 151 வாகனங்கள் முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் டிச. 29 ஆம் தேதியும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 157 வாகனங்கள் டிச.30 ஆம் தேதி அதே காவல் நிலையத்திலும் பொது ஏலம் விடப்படும்.

விரும்புவோா் டிச. 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் ரூ.5000 முன்பணம் செலுத்தி, தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை, அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (18 சதவீதம்) ஆகியவற்றை ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.