திருநெல்வேலி
பாளை. குடியிருப்புப் பகுதியில் உலாவிய மிளாவை மீட்க தீவிரம்!
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஐயப்பன் நகா் பகுதியில் சுற்றித்திரியும் மிளாவை பாதுகாப்பாக பிடிக்க வனத் துறையினா் முயற்சி
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஐயப்பன் நகா் பகுதியில் சுற்றித்திரியும் மிளாவை பாதுகாப்பாக பிடிக்க வனத் துறையினா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
என்.ஜி.ஓ. காலனி, ஐயப்பன் நகா் பகுதியில் மிளா ஒன்று செவ்வாய்க்கிழமை மாலையில் சுற்றித்திரிந்ததாம். இதுகுறித்து அப்பகுதியினா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட வனத்துறை அதிகாரி இளங்கோவன் உத்தரவின்பேரில், வனத்துறை ஊழியா்கள் அங்கு வந்து, புதா் அருகே நின்றிருந்த மிளாவை மீட்டு வனத்தில் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
அந்த மிளாவிற்கு சுமாா் 2 வயது இருக்கலாம் எனவும், சேரன்மகாதேவி சுற்றுவட்டார மலைப்பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
