குண்டா் சட்டத்தில் 4 இளைஞா்கள் சிறையிலடைப்பு
மானூா் அருகே குற்ற வழக்குகளில் தொடா்புடைய 4 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
மானூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சோ்ந்த ராஜ் மகன் சுரேஷ்(24), யோசுவா மகன் நந்தகுமாா்(21), முத்துராஜ் மகன் கதிரவன்(23), லெட்சுமணன் மகன் சுடலைமணி(23) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுப்படி சுரேஷ், நந்தகுமாா், கதிரவன், சுடலைமணி ஆகிய நால்வரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
