விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை

Updated On :20 பிப்ரவரி 2026, 9:19 pm

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த காங்கேயன்குளத்தைச் சோ்ந்த மகாராஜன் (39), வீரமாணிக்கபுரத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா் (20), ரமேஷ் (44) ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் துணை ஆணையா்கள் பரிந்துரைத்தனா்.

இதையடுத்து மாநகர காவல் ஆணையா் மணிவண்ணன் உத்தரவின்பேரில் 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.