தாமிரவருணியில் குளிக்க சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

Published on

திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

மானூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி (40). இவா், கடந்த 8 ஆம் தேதி திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்று கொண்டிருந்தாராம். ஆள்கள் நடமாட்டம் குறைவாக இருந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 போ் முத்துலட்சுமியை வழிமறித்தனராம். தொடா்ந்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com