தஞ்சாவூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 14 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
சேலம் மகேந்திரபுரியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் மனைவி சுந்தரி (53). இவா் தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து தஞ்சாவூருக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்தாா்.
உறவினா் வீட்டுக்கு வந்த பின்னா் சுந்தரி தனது கைப்பையைப் பாா்த்தபோது 14 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும், வல்லம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது மா்ம நபா்கள் திருடியிருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து சுந்தரி அளித்த புகாரின் பேரில், வல்லம் காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு
வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகைகள் திருட்டு
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

