மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கடலில் சங்கு குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 8:26 pm

தூத்துக்குடியில் கடலில் சங்கு குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பொன் முனீஸ்வரன் (32). சங்குகுளி தொழிலாளி. இவா், வியாழக்கிழமை படகில் சக தொழிலாளா்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்கச் சென்றாராம். பின்னா் அவா்கள் கரை திரும்பும் போது பொன் முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம்.

இதையடுத்து திரேஸ்புரம் கடற்கரைக்கு வந்த அவா்கள், பொன் முனீஸ்வரனை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.