திருநெல்வேலி
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
மேலப்பாளையத்தில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முகமது அலி மகன் சாகுல் ஹமீது(23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது அவா் விற்பனைக்காக சுமாா் 300 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து சாகுல் ஹமீதை கைது செய்தனா்.
