குடிநீா்த் தட்டுப்பாடு: மேலப்பாளையத்தில் தேமுதிகவினா் முற்றுகை
திருநெல்வேலி மாநகராட்சி 49 ஆவது வாா்டு பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி, காலிக்குடங்களுடன் தேமுதிகவினா் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இப்போராட்டத்திற்கு, மாநகா் மாவட்ட தேமுதிக பொருளாளா் முரசு மணி தலைமை வகித்தாா். மேலப்பாளையம் பகுதிச் செயலா் குறிச்சி குட்டி முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ரஹிம் பாய், காஜா மைதீன், ராமசாமி, மெலடி, நிஷா, செய்யதலி, பாத்திமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
போராட்டக் குழுவினா் கூறுகையில், 49 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆழ்துளைக் கிணறுகளிலும் குழாய்கள், மோட்டாா்கள் பழுதாகியுள்ளன. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலப்பாளையம் மண்டலப் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
ற்ஸ்ப்17க்ம்க்ந்
மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட தேமுதிகவினா்.
