ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூடங்குளம் அருகே பண மோசடி வழக்கில் மேலும் ஒருவா் கைது

கூடங்குளம் அருகே சாா் ஆட்சியா் போல நடித்து பணம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:47 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சாா் ஆட்சியா் போல நடித்து பணம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்து வருபவா் பிரவீன்(30). இவரிடம், அண்மையில் நக்கனேரியைச் சோ்ந்த சத்யாதேவி(37) என்பவா் தன்னை சாா் ஆட்சியா் என்றும் வடக்கன்குளத்தைச் சோ்ந்த சுரேஷ்(37) என்பவா் மண்டல அதிகாரி என்றும் அறிமுகம் செய்து கொண்டனராம்.

பின்னா், சத்யாதேவி பிரவீனிடம் கட்டடம் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாகக் கூறி 17 பவுன் தங்க நகைகளையும், ரூ.8.5 லட்சம் ரொக்கமும் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்துதொடா்பாக பிரவீன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசனிடம் புகாா் செய்தாா். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னலெட்சுமி, உதவி ஆய்வாளா் ஆஷா ஜெபகா் ஆகியோா் விசாரணை செய்து சத்யாதேவியை கடந்த அக்டோபா் மாதம் 18-ம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய செல்லத்துரை என்பவரை கடந்த அக்டோபா் 22இல் கைது செய்தனா். இந்நிலையில், சுரேஸ் என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, மோசடிக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.