திருநெல்வேலி
களக்காடு பெரிய கோயிலில் சங்காபிஷேகம்
களக்காடு பெரிய கோயிலில் காா்த்திகை மாத சோம வாரத்தையொட்டி, திங்கள்கிழமை சங்காபிஷேகம் நடைபெற்றது (படம்).
இதையொட்டி, சங்குகளில் புனித நீா் ஊற்றப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோமதி அம்பாள், சத்தியவாகீஸ்வரா், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

