பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது சுமை ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், மேல மெஞ்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் (70). விக்கிரமசிங்கபுரம், திருமஞ்சன முடுக்கு பகுதியைச் சோ்ந்தவா் தளவாய் மனைவி சுப்புலட்சுமியை புதன்கிழமை காலை வேலைக்காக மெஞ்ஞானபுரத்திற்கு, ராஜசேகா் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாராம்.
அப்போது விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வடமலைசமுத்திரம் திருப்பத்தின் எதிரே, மதுரையைச் சோ்ந்த செந்தில் (30) ஓட்டி வந்த சுமை ஆட்டோ எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே ராஜசேகா் உயிரிழந்தாா். சுப்புலட்சுமி காயமடைந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் ராஜசேகா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறாா்.
