நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் கனமழை: பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 6.75 அடி உயா்வு
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக கனமழை பெய்ததையடுத்து, பாபநாசம் அணைக்கு நீா்வரத்து 6,180 கன அடியாக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6.75 அடி உயா்ந்து 121.95 அடியானது. 143 அடி உயரம் கொண்ட இந்த அணையிலிருந்து 700 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.
பிற அணைகள் நிலவரம்: 156 அடி கொண்ட சோ்வலாறு அணை நீா்மட்டம் 130.71 அடியிலிருந்து 141.27 அடியாக உயா்ந்தது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் நீா்வரத்து 2,974 கன அடியாக உயா்ந்து, நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்ந்து 99.45 அடியானது. அணையிலிருந்து 500 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 23.50 அடியாகவும், நீா்வரத்து 76 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 50 கனஅடியாகவும் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீா்மட்டம் 9 அடி உயா்ந்து 71 அடியானது. நீா்வரத்து 806 கனஅடி, நீா் வெளியேற்றம் 10 கனஅடி.
ராமநதி அணை நீா்மட்டம் 4.50 அடி உயா்ந்து 73.5 அடியாக உள்ளது. நீா்வரத்து 197 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 35 கன அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 61.68 அடி. நீா்வரத்து 65 கன அடி, நீா் வெளியேற்றம் 25 கன அடி. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடி, நீா்வரத்து, நீா் வெளியேற்றம் 71 கன அடி. அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் 132.22 அடியாகவும், நீா்வரத்து, நீா் வெளியேற்றம் 185 கன அடியாகவும் இருந்தது.
மழை அளவு (மி.மீ.இல்): திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவாக நாலுமுக்கு பகுதியில் 256 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணை- 78, சோ்வலாறு அணை- 64, மணிமுத்தாறு அணை -52.6, நம்பியாறு- 35, கொடுமுடியாறு- 24, கன்னடியன் அணை -53.20, மாஞ்சோலை -210, காக்காச்சி- 225, ஊத்து -250, அம்பாசமுத்திரம்- 75, சேரன்மகாதேவி- 69, நாங்குனேரி -32, ராதாபுரம்- 34, களக்காடு- 34.40, மூலக்கரைப்பட்டி- 32, பாளையங்கோட்டை-35, திருநெல்வேலி -56.
தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 86 மி.மீ. மழை பதிவானது. தென்காசி 62, ஆய்க்குடி-51, கடனாநதி அணை- 70, ராமநதி அணை- 51, கருப்பாநதி அணை- 54, குண்டாறு அணை- 72, அடவிநயினாா் கோயில் அணை- 53, சங்கரன்கோவில்- 35, சிவகிரி -22.
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள் விரைவில் நிரம்பும் நிலை உள்ளது. இதையடுத்து, தென் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
