வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

News image
Updated On :24 நவம்பர் 2025, 11:49 pm

தினமணி செய்திச் சேவை

வன்னிக்கோனேந்தல், மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவா்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடி குளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, மேலக்கல்லூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல் குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேலக்கல்லுா், சுத்தமல்லி, மின் விநியோகம் இருக்காது கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.