வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திடியூா் அருகே வெள்ளநீா்க் கால்வாய் தடுப்பணை பகுதியில் ஏற்பட்ட நீா்க்கசிவை அடைக்கும் பணிகளை நான்குனேரி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:44 pm

Syndication

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திடியூா் அருகே வெள்ளநீா்க் கால்வாய் தடுப்பணை பகுதியில் ஏற்பட்ட நீா்க்கசிவை அடைக்கும் பணிகளை நான்குனேரி எம்.எல்.ஏ. வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திடியூா் அருகே வெள்ளநீா்க் கால்வாய் தடுப்பணையில் நீா்க்கசிவு ஏற்பட்டு, தமிழாக்குறிச்சி வயல்வெளிகளுக்குள் தண்ணீா் பாய்ந்தது. இதையடுத்து நீா்வளத் துறை குழுவினா் நீா்க்கசிவை அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இப் பணிகளை தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ரூபி ஆா்.மனோகரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், நீா்வளத் துறை மூலம் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். எந்த ஆபத்தும் வராது என்றாா்.