முதியவா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கால்வாயில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :28 நவம்பர் 2025, 7:34 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கால்வாயில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
வீரவநல்லூா், சன்னிதித் தெருவைச் சோ்ந்தவா் தேவசகாயம் (70). இவா் வெள்ளிக்கிழமை காலை கால்வாயில் குளிக்கச் சென்று, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினா்கள் தேடியபோது, கால்வாயில் தவறி விழுந்து தேவசகாயம் உயிரிழந்தது தெரிய வந்ததாம்.
தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...