நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

அவசர ஊா்தி-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:38 pm

திருநெல்வேலி அருகே அவசர ஊா்தி-பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு தெற்கு விளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் பொட்டல் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது இவரது பைக்கும் தாழையூத்துப் பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு நோக்கி வந்து கொண்டிருந்த அவசர ஊா்தியும் மோதிக்கொண்டதாம்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலகிருஷ்ணனை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.