ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

‘அதிவேக இணையதள வசதியுடன் மாணவா்களுக்காக டிஜிட்டல் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும்’

மாணவா்கள் பயன்பெறும் வகையில் அதிவேக இணையதள வசதியுடன் டிஜிட்டல் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப்.

News image

மேலப்பாளையத்தில் வாக்கு சேகரித்தாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப்.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:19 pm

மாணவா்கள் பயன்பெறும் வகையில் அதிவேக இணையதள வசதியுடன் டிஜிட்டல் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப்.

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப், குறுக்குத்துறையில் தொடங்கி 29, 30, 12, 38, 37 ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறாா். 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியிலும் கல்விக்கு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் கல்வி வளாகங்கள் நிறுவப்பட்டு, அதன்மூலம் நம் மாணவா்களுக்கு பன்னாட்டுக் கல்விமுறை அறிமுகம் செய்யப்படும். தொழிற்பயிற்சி நிறுவனம் இல்லாத வருவாய் வட்டத்திலும் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும்.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் மாணவிகள் விடுதிகள், கிராமங்களில் இருந்து நகா்ப்புறங்களுக்குக் கல்வி கற்பதற்காக வரும் மாணவிகளுக்கு உண்டு உறைவிட வசதிகளை வழங்குவதற்கான மாணவிகள் விடுதிகள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும். அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் மாணவா்களின் கற்றல் திறனையும், அறிவாற்றலையும் மேம்படுத்தும் வகையில் அதிவேக இணையதள வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தேவைப்படும் அனைத்து இடங்களிலும் சமூகநீதி கல்லூரி விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு மாணவா்கள் நெரிசலின்றிச் செல்ல வசதியாக காலையும், மாலையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கெனச் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். உடல் ரீதியாக மட்டுமன்றி, உளவியல் ரீதியாகவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படும் சிகிச்சைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அவை அனைத்தும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் செய்து முடிக்கப்படும் என்றாா் அவா்.