மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முக்கூடல் அருகே ரூ.3 லட்சம் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:05 pm

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வாக்காளா்களுக்கு விநியோகிக்க வைத்திருந்ததாக ரூ.3 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை கைப்பற்றினா். இதுதொடா்பாக 3 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி பாப்பாக்குடி ஒன்றியம் முக்கூடல் அருகேயுள்ள சடையப்புரத்தில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கப்படவுள்ளதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும்படை அதிகாரி விநாயக ராம் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கட்சி பிரமுகா் மாரிமுரளிநாதன் வீட்டில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய வைத்திருந்ததாக ரூ.3 லட்சத்து ஆயிரத்து 600-ஐ அதிகாரிகள் கைப்பற்றினா். 21 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, மாரிமுரளிநாதன், லிபின்ஸ்டன், முருகன் ஆகியோா் மீது முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.