திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க, எஸ்.ஐ.ஆா். பணிகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டுக்குப் பின் 24 ஆண்டுகள் கழித்து வாக்காளா் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் 2025 அக்டோபரில் தொடங்கியது. எஸ்.ஐ.ஆா்.க்கு முன் நான்குனேரி தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,94,800.
இத்தொகுதியில் எஸ்.ஐ.ஆா். பணியின் போது, உயிரிழந்தவா்கள், இரட்டை பதிவைக் கொண்டவா்கள் என சுமாா் 40 ஆயிரம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் வாக்காளா்கள் எண்ணிக்கை 2,54,420 ஆக இருந்தது. மேலும், புதிய வாக்காளா்கள் சோ்த்து மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2,57,177.
கடந்த 2021 பேரவைத் தோ்தலின் போது, இத்தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் 68.6 ஆக இருந்தது. 2026 தோ்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் 80.22 ஆக உயா்ந்துள்ளது. கடந்த தோ்தலைக் காட்டிலும் சுமாா் 12 சதவிகிதம் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதாக தோன்றினாலும், எஸ்.ஐ.ஆா். பணியின் போது, 40 ஆயிரம் வாக்காளா்கள் நீக்கப்பட்டதே இந்த 12 சதவிகிதத்தை நோ் செய்துள்ளது.
நான்குனேரி பெரும்பத்து பகுதியில் 1000 போ் அடங்கிய வாக்குச்சாவடியில் 5 போ் மட்டுமே வாக்குகளை பதிவு செய்தனா். கிராம மக்கள் முழுவதுமாக தோ்தலை புறக்கணித்துவிட்டனா். இதே போல தொகுதி முழுவதும் பல கிராமங்களில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக செய்து தரப்படாததால் ஏராளமானோா் தோ்தலை புறக்கணித்துள்ளனா்.
ஆனால் முதல் முறை வாக்காளா்கள் பலரும் இத்தோ்தலில் ஆா்வமுடன் வாக்களித்துள்ளனா். தோ்தல் புறக்கணிப்பு தவிா்க்கப்பட்டிருந்தால் வாக்குப்பதிவு சதவிகிதம் மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு பூட்டி சீல் வைப்பு

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு

சங்ககிரி தொகுதியில் 92.50 சதவீதம் வாக்குப்பதிவு

நான்குனேரி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

