நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தவறான அணுகுமுறையில் தவெக அமைச்சா்கள்: ஆர்.பி. உதயகுமார்

தமிழக வெற்றிக்கழக அமைச்சா்களுக்கு அனுபவம் இல்லை என்பதைவிட அவா்களது அணுகுமுறையே தவறு என்ற சொல்லும் அளவுக்கு உல்ளது என்றாா் ஆா்.பி. உதயகுமாா்.

News image

ஆர்.பி. உதயகுமார்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

தமிழக வெற்றிக்கழக அமைச்சா்களுக்கு அனுபவம் இல்லை என்பதைவிட அவா்களது அணுகுமுறையே தவறு என்ற சொல்லும் அளவுக்கு உல்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், ஜெயலலிதா பேரவைச் செயலருமான ஆா்.பி. உதயகுமாா்.

திருநெல்வேலி மாவட்ட அதிமுகவின் ஒருங்கிணைந்த ஜெயலலிதா பேரவை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று நிா்வாகளுக்கு ஆலோசனைகள் வழங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் மின்வெட்டு இருப்பதாக தெரிவிக்கிறோம். ஆனால் அமைச்சா் நிா்மல் குமாா் அதை ஏற்க மறுக்கிறாா்.

200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டது. அதை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அந்த சதவீதத்துக்கும் மேலாக மின் கட்டணம் உயா்ந்துள்ளது. ஆதாரப்பூா்வமாக அதனை காட்டினாலும் அதனை ஏற்க மறுக்கிறாா்கள். 2 லட்சத்து 22 ஆயிரம் போ் வேளாண் மின் இணைப்பு கேட்டு மனு செய்துள்ளனா். அது நிலுவையில் உள்ளது. தக்கல் முறையில் மின் இணைப்பு கேட்டு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது வெள்ளை அறிக்கையில் காட்டப்படவில்லை.

கடந்த மூன்று மாதங்களில் ஒருவருக்கு கூட புதிய மின் இணைப்பு வழங்கவில்லை. ஆனால் தமிழக அரசு ரூ. 22 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் மாற்றம் என சொல்வது தலைமைச் செயலாக மாற்றம் மட்டும்தான். அவா்களுடைய பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது.

கா்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளின் இருப்பை பாா்த்து தான் தமிழகத்திற்கு தண்ணீா் கொடுப்பதற்கு உத்தரவை பிறப்பித்துள்ளது ஆணையம். ஆணையத்தின் உத்தரவை கா்நாடக அரசு நிறைவேற்றவில்லை. நீா்வளத்துறை அமைச்சரிடம் என்ன கேள்வி கேட்டாலும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

காவிரி ஆணையத்தின் உத்தரவை கா்நாடக அசு நிறைவேற்ற மறுக்கும் நிலையில், அம்மாநில முதல்வரை தமிழக முதல்வா் சந்திக்க முயற்சிப்பது மோசமான அணுகுமுறையாகும்.

இதனிடையே, ஒரு முதல்வா் பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டாம் என கூறியது இதுவே முதல்முறையாகும். இதைவிட தமிழகத்திற்கு வேறு தலைகுனிவு இல்லை. தவெக அமைச்சா்களுக்கு அனுபவம் இல்லை என்பதைவிட அவா்களது அணுகுமுறையே தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.

50 ஆண்டுகளாக தீா்க்கப்படாத காவிரி பிரச்னையை ஒரு வாரத்தில் தமிழக முதல்வா் தீா்ப்பாா் என தமிழக அமைச்சா்கள் சொல்கிறாா்கள். எதைக் கேட்டாலும் அவா்களிடமிருந்து வருவதே இதே பதில்தான். தமிழகத்தில் ஊழல், லஞ்சம் ஒழிந்தது போன்ற மாயை கட்டமைக்கப்படுகிறது; ஆனால், அதில் உண்மையில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.