6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ.யிடம் ரூ. 16.16 லட்சம் மோசடி: மேலும் 3 போ் கைது

Arrested

கைது

Published On :

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளரிடம் இணைய வழியில் ரூ. 16.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் மூவரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்தவா் சுந்தரவடிவேல் (64). காவல்துறையில் எஸ்.எஸ்.ஐ. ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவரிடம், வாட்ஸ்ஆப் எண்ணில் தொடா்பு கொண்டு பேசிய மா்ம நபா்கள் இணையவழி முதலீடு மூலம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினராம்.

இதை நம்பி, அவா் பல்வேறு தவணைகளாக மோசடி நபா்கள் கொடுத்த வங்கிக் கணக்குக்கு சுமாா் ரூ. 16.16 லட்சத்தை அனுப்பினாராம். பிறகு தான் மோசடி செய்யப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இதில் தொடா்புடைய திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த புவனேஷ் (25), கோபி (26), ராகுல், ஊத்துக்குழியைச் சோ்ந்த பட்டீஸ்வரன் (28) ஆகியோரை கைது செய்திருந்தனா்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய மதுரை மாவட்டம், முத்துராமலிங்கபுரத்தைச் சோ்ந்த லிங்கப்பனை (42) வெள்ளிக்கிழமையும், மதுரை மாவட்டம், பசும்பொன் நகரைச் சோ்ந்த நாராயணசாமி (52), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் (34) ஆகியோரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.