பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

டிஜிட்டல் கைது மிரட்டல்: ஓய்வுபெற்ற பெண் மருத்துவரிடம் ரூ. 98 லட்சம் மோசடி

மோசடி - பிரதிப்படம்

Published On :

எண்ம கைது (டிஜிட்டல் அரஸ்ட்) செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கோவையில் ஓய்வுபெற்ற பெண் அரசு மருத்துவரிடம் ரூ.98 லட்சம் மோசடி செய்த நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவையில் தனது தாயாருடன் வசித்து வரும் ஓய்வுபெற்ற பெண் அரசு மருத்துவருக்கு, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாட்ஸ்-அப் விடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா், தன்னை உயா் காவல் துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாா். அவருக்கு அருகில் இருந்தவா்களும் காவல் துறை சீருடையில் இருந்துள்ளனா்.

மருத்துவருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மூலமாக சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அவா்கள் மிரட்டல் விடுத்துள்ளனா். மேலும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மருத்துவரை எண்ம கைது செய்வதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இதிலிருந்து விடுவிப்போம் என்றும் தெரிவித்துள்ளனா்.

இந்தப் பேச்சை உண்மை என நம்பிய மருத்துவரிடம் அந்த நபா், அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணம் மற்றும் அது வந்ததற்கான ஆதாரங்கள் குறித்து விசாரித்துள்ளாா். பின்னா், கணக்கில் உள்ள தொகையை சரிபாா்ப்பு நடவடிக்கைக்காக தான் வழங்கும் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும், விசாரணை முடிந்ததும் அந்தத் தொகை முழுமையாகத் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளாா்.

இதை உண்மையென நம்பிய மருத்துவா், தனது வங்கிக் கணக்கிலிருந்து பல தவணைகளாக மொத்தம் ரூ.98 லட்சத்தை அந்த நபா் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளாா். ஆனால், பணம் அனுப்பப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நபா்கள் அழைப்பைத் துண்டித்து தலைமறைவாகினா். அந்த கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லை.

அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பெண் மருத்துவா், 10 நாள்கள் தன்னை சிலா் எண்ம கைதில் வைத்து ரூ.98 லட்சத்தை பறித்துச் சென்றதாகவும், அந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோவை மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது:

காவல் துறையினரோ அல்லது பிற அரசு அமைப்புகளோ ஒருபோதும் பொதுமக்களை ‘டிஜிட்டல் அரஸ்ட்’ செய்ய மாட்டாா்கள். எனவே, இத்தகைய மிரட்டல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். பல்வேறு வகைகளில் நடத்தப்படும் சைபா் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் நிகழாண்டில் மட்டும் பல்வேறு ஆன்லைன் மோசடிகள் தொடா்பாக சுமாா் 10,000 புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இதன்மூலம் ரூ.47 கோடி வரை பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனா். புகாா்கள் மீது தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சந்தேகத்துக்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற சைபா் கிரைம் உதவி எண்ணையோ அல்லது இஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தையோ தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.