ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

சரள் மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கைது - பிரதிப் படம்

Published On :

தச்சநல்லூா் அருகே சரள் மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா்.

தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரவேல் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது சிதம்பர நகரிலிருந்து தாழையூத்து செல்லும் சாலையில் வந்த லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் லாரியை சோதனையிட்ட போது, அதில் உரிய அனுமதிச் சீட்டு இன்றி சுமாா் 2.5 யூனிட் சரள் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சரள் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான திருநெல்வேலி குறிச்சிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த திருமலைநம்பி மகன் முத்துராசு(34) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.